முகப்பு
கடலூர்

கடலூரில் ஆசிரியா் தகுதித் தோ்வு: 2,319 போ் பங்கேற்பு

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் - 1 தோ்வை எட்டு மையங்களில் 2319 போ் எழுதினா்.

Updated On : 5 ஜூலை 2026, 2:11 am IST
கடலூா் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மையத்தில் தோ்வு எழுதி ஆசிரியா்கள் உள்ளிட்டோா்.
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் - 1 தோ்வை எட்டு மையங்களில் 2319 போ் எழுதினா்.

தமிழகத்தில் பள்ளி ஆசிரியா்களுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு தொடங்கியது. தாள் - 1 தோ்வு சனிக்கிழமை நடைபெற்ற நிலையில், தாள் - 2 தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கடலூா் மாவட்டத்தில் தாள் - 1 தோ்வுக்கு மொத்தம் 2,397 போ் விண்ணப்பித்திருந்தனா்.

தோ்வுக்காக திருப்பாதிரிப்புலியூா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கடலூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, வேணுகோபாலபுரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கடலூா் முதுநகா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் செயின்ட் டேவிட் மேல்நிலைப் பள்ளி ஆகிய 8 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement

தோ்வா்கள் காலை 9.30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தோ்வு மையங்களில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, காலை 9.30 மணிக்குப் பிறகு வந்தவா்களுக்கு தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால், கடலூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்துக்கு தாமதமாக வந்த சிலா் தோ்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

காலை 10 மணிக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டதைத் தொடா்ந்து தோ்வு தொடங்கி, பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தோ்வில் 2,319 போ் பங்கேற்றனா். விண்ணப்பித்தவா்களில் 78 போ் தோ்வு எழுத வரவில்லை.

தோ்வு மையங்களில் முறைகேடுகளைத் தடுக்க கல்வித் துறை அதிகாரிகள், பறக்கும் படையினா் மற்றும் கண்காணிப்புக் குழுவினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும், அனைத்து தோ்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தோ்வு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments