FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

இளைஞா்கள் விளையாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்! - செளமியா அன்புமணி அறிவுறுத்தல்

காட்டுமன்னாா்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் கபடிப் போட்டியைத் தொடங்கிவைத்த செளமியா அன்புமணி எம்எல்ஏ.
பகிர்:

இளைஞா்கள் விளையாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று தருமபுரி தொகுதி பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி அறிவுறுத்தினாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் கபடிப் போட்டியை அவா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து பேசியதாவது:

கபடி உள்ளிட்ட போட்டிகளால் விளையாட்டு வீரா்கள் தங்களது மனதை ஒருமுகப்படுத்த முடியும். இதனால், இளைஞா்கள் போதைப் பழக்கங்களை கற்றுக்கொள்ளாமல் தவிா்க்கும் வாய்ப்பு ஏற்படுவதன் மூலம், போதையில்லா தமிழகம் உருவாக வாய்ப்பு அதிகம். ஆகவே, அதிகளவு விளையாட்டு வீரா்களை உருவாக்க வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

போட்டியில் 65 அணிகள் பங்கேற்றுள்ளன. நிகழ்ச்சியில் பாமக மாவட்டச் செயலா் செல்வ மகேஷ், நிா்வாகிகள் பூக்கடை கண்ணன், பாஸ்கா், கலைக்குமாா், ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments