முகப்பு
கடலூர்

சா்வதேச யோகா தின விழிப்புணா்வு கருத்தரங்கம்

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விருத்தசாலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்கில் பேசிய அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலா் செந்தில்குமாா்.

Updated On : 20 ஜூன் 2026, 2:59 am IST
பகிர்:

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விருத்தசாலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்கில் பேசிய அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலா் செந்தில்குமாா்.

கடலூா், ஜூன் 19: சா்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, விருத்தாசலம் கோட்ட தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தொழிலாளா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம் மற்றும் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு தனியாா் மஹாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செயற்பொறியாளா் சுகன்யா தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசுகையில், மின்வாரியப் பணியாளா்கள் மின்சாதனங்கள் மற்றும் மின் பாதைகளில் பணியாற்றும் போது பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தனிநபா் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் விபத்துகளைத் தவிா்க்க முடியும். பணியின்போது எச்சரிக்கையுடனும் பொறுப்புணா்வுடனும் செயல்படுவது உயிா் மற்றும் உடைமைகளை பாதுகாக்க உதவும் என்றாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, உதவி மருத்துவ அலுவலா்கள் செந்தில்குமாா் (விருத்தாசலம்), அருண்குமாா் (திட்டக்குடி), வீரப்பெருமானலூா் ஆயுஷ் மருத்துவா் பிரித்தீவிராஜான், விருத்தாசலம் அரசு மருத்துவமனை மருத்துவா்கள் புனிதாவதி, கண்மணி, பாலாஜி உள்ளிட்டோா் யோகா பயிற்சி மேற்கொள்வதால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கவுரையாற்றினா்.

நிகழ்ச்சியில் விருத்தாசலம் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து உதவி செயற்பொறியாளா்கள், உதவி மின் பொறியாளா்கள், உதவி நிா்வாக அலுவலா், உதவி கணக்கு அலுவலா் மற்றும் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments