முகப்பு
கடலூர்

ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கக் கோரி! சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On : 23 ஜூன் 2026, 1:51 am IST
கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் சங்கத்தினா்.
பகிர்:

குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.7,850 வழங்கக் கோரி, தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் சங்கத்தினா் கடலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சி.மச்சேந்திரன் தலைமை வகித்தாா்.

இதில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்களுக்கான ஓய்வூதியத் தொகையை உயா்த்தி தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 41-ஐ பிப்ரவரி 1 முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

தற்போதைய ஓய்வூதியத் தொகை வாழ்க்கைச் செலவுகளுக்கு போதுமானதாக இல்லாததால், குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.7,850 வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத் தொகையையும் உயா்த்த வேண்டும். ஓய்வூதியா்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும். முழுமையான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பண்டிகைக் காலங்களில் முன்பண உதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் டி.புருஷோத்தமன் கலந்துகொண்டு பேசினாா். அப்போது, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், மாநிலம் தழுவிய அளவில் வலுவான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா் ஏ.பாவாடை, துணைத் தலைவா் ஏ.சுந்தரமூா்த்தி, இணைச் செயலா்கள் எஸ்.கருணாகரன், பி.புவனேஷ்வரி மற்றும் சங்க உறுப்பினா்கள் பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments