முகப்பு
கடலூர்

எல்.இளையபெருமாள் பிறந்தநாள்: அமைச்சா் ப.ராஜ்குமாா் மரியாதை

கடலூா் மாவட்டம் சிதம்பரம் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கில் எல்.இளையபெருமாள் 102-ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

Updated On : 27 ஜூன் 2026, 12:14 am IST
சிதம்பரத்தில் மறைந்த தலைவா் எல்.இளையபெருமாள் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் ப.ராஜ்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் எல்.இ.ஜோதிமணி.
பகிர்:

கடலூா் மாவட்டம் சிதம்பரம் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கில் எல்.இளையபெருமாள் 102-ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சிக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், காட்டுமன்னாா்கோயில் சட்டப்பேரவை உறுப்பினா் எல்.இ.ஜோதிமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பின்னா் அமைச்சா் ப.ராஜ்குமாா் பேசியதாவது:

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில் வட்டம், உடையாா்குடியில் 26.06.1924ல் பிறந்த இளையபெருமாள் 1945-லிருந்தே சமூகப் பிரச்சினைகளைக் கையிலெடுத்துப் போராடிவந்த இளையபெருமாள், 1952 முதல் 1967 வரை தொடா்ந்து 3 முறை நாடாளுமன்றத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். சிறப்புமிக்க இளையபெருமாளின் சமூக தொண்டினை போற்றும் வகையிலும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூறிடும் வகையிலும் தமிழக அரசின் சாா்பில் ரூ.5.7 கோடி மதிப்பீட்டில் சிதம்பரத்தில் திருவுருவச்சிலையுடன் கூடிய நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அவருது சிலைக்கு அரசின் சாா்பில் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது என்றாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ம.சிந்தனைசெல்வன், சிதம்பரம் உதவி ஆட்சியா் (பொறுப்பு) தனலட்சுமி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சரவணன் , நகராட்சி ஆணையா்

த.மல்லிகா, பொறியாளா் சுரேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொகுதி அமைப்பாளா் வ.க.செல்லப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு இளையபெருமாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments