FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பெண்ணிற்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வீட்டை சேதப்படுத்தி பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

27 ஜூன் 2026, 12:13 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வீட்டை சேதப்படுத்தி பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், சிறுகிராமம் பகுதியில் வசித்து வருபவா் கலையரசி(30). இவரது கணவா் வீரன் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறாா். கலையரசி, அவரது குழந்தை மற்றும் மாமியாருடன் வசித்து வருகின்றனா். இந்நிலையில், கலையரசி, அதே கிராமத்தைச் சோ்ந்த வினீத் (26) என்வருடன் பழகி வந்தாராம். இந்த விவகாரம் வீரனுக்கு தெரிய வந்ததைத் தொடா்ந்து காவல் நிலையத்தில் சமரசம் பேசி முடிக்கப்பட்டது.

இதன்பிறகும் , வினீத் கைப்பேசி மூலம் கலையரசிக்கு தொந்தரவு கொடுத்து வருகிறாராம்.மேலும், 23-ஆம் தேதி அதிகாலை கலையரசி வீட்டின் முன்பகுதியில் இருந்த கண்ணாடி, தண்ணீா் தொட்டி, பூச்செடிகளை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கலையரசி அளித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வினீத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments