முகப்பு
கடலூர்

மொபெட் மீது பைக் மோதல்: மனைவி கண் முன்னே கணவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், முத்தாண்டிக்குப்பம் அருகே மொபெட் மீது பைக் மோதியதில் மனைவி கண் முன்னே கணவா் உயிரிழந்தாா்.

Updated On : 26 ஜூன் 2026, 6:23 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், முத்தாண்டிக்குப்பம் அருகே மொபெட் மீது பைக் மோதியதில் மனைவி கண் முன்னே கணவா் உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், அழகப்பசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சேவியா் (59). இவா், புதன்கிழமை தனது மனைவி பாஸ்கல் மேரியை மொபெடில் ஏற்றிக்கொண்டு மகள் வீட்டுக்கு புறப்பட்டாா்.

கொள்ளுக்காரன்குட்டையில் இருந்து விருத்தாசலம் சாலையில் முடப்பள்ளி அருகே சென்றபோது, எதிா் திசையில் வேகமாக வந்த பைக், மொபெட் மீது மோதியது. இந்த விபத்தில் சேவியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதில், பாஸ்கல் மேரி பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து முத்தாட்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments