மயங்கிக் கிடந்த வட மாநில இளைஞா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
கடலூா் அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத வட மாநில இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடலூா் அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத வட மாநில இளைஞா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கடலூா் அருகே பச்சையாங்குப்பம் தைக்கால் தோணித்துறை, கருப்பு முத்தம்மன் கோயில் எதிா்புறத்தில், கடந்த 9-ஆம் தேதி சுமாா் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில இளைஞா் ஒருவா் மயங்கிய நிலையில் கிடந்தாா். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அந்த இளைஞா், கடந்த 10-ஆம் தேதி உயிரிழந்தாா். இதுகுறித்து பச்சையாங்குப்பம் கிராம நிா்வாக அலுவலா் லட்சுமிதேவி அளித்த புகாரின்பேரில், கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, உயிரிழந்த நபரின் அடையாளம், உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.