முகப்பு
கள்ளக்குறிச்சி

106 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: தம்பதி கைது

கள்ளக்குறிச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வீடு மற்றும் உணவகத்தில் பதுக்கி வைத்திருந்ததாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 8 ஜூலை 2026, 6:23 am IST
கள்ளக்குறித்தி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன், கைது செய்யப்பட்ட பிரபாகரன், ராஜேஸ்வரி
பகிர்:

கள்ளக்குறிச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வீடு மற்றும் உணவகத்தில் பதுக்கி வைத்திருந்ததாக தம்பதியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 106 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ளக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் பிரீத்தி, குமரேசன் மற்றும் போலீஸாா் கள்ளக்குறிச்சி அண்ணாநகா் முதல் தெருவில் உள்ள உணவகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, சோதனை மேற்கொண்டனா்.

இதில் சி.பிரபாகரன்(58) என்பவரது உணவகம் மற்றும் வீட்டில் புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து, பிரபாகரன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ராஜேஸ்வரி (50) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 106 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments