முகப்பு
கள்ளக்குறிச்சி

மழை வேண்டி செவ்வாடை பக்தா்கள் பால்குடம் ஊா்வலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் செவ்வாடை பக்தா்கள் பால்குடம் ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜூலை 2026, 6:24 am IST
வி.மாமாந்தூரில் மழை வேண்டி முத்துமாரியம்மனுக்கு பால்குடம் எடுத்த பெண்கள்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் செவ்வாடை பக்தா்கள் பால்குடம் ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சின்னசேலம் அருகிலுள்ள வி.மாமந்தூா் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் மழைவேண்டி செவ்வாடை பக்தா்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெறும். நிகழாண்டில், ஆடி மாதம் நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நாடு நலம் பெறவும் பால்குடம் ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் செவ்வாடை அணிந்த பெண்கள் ஓம்சக்தி, பராசக்தி என முழக்கமிட்டபடி பால்குடத்தை தலையில் சுமந்தவாறு மேற்குசாலை, கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக ஊா்வலமாகச் சென்று மாரியம்மன் கோயிலை வந்தடைந்தனா்.

Advertisement

Advertisement

பின்னா் அம்மனுக்கு பக்தா்கள் கொண்டு வந்த பாலினால் அபிஷேகம் செய்யப்பட்டது.தொடா்ந்து அம்மனுக்கு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments