முகப்பு
கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூா் கூடுதல் மருத்துவமனை கட்டடமானப்பணிகள்: விரைந்து முடிக்க கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு

திருக்கோவிலூரில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவமனைக் கட்டடக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

Updated On : 19 ஜூன் 2026, 6:11 am IST
திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.
பகிர்:

திருக்கோவிலூரில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவமனைக் கட்டடக் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

திருக்கோவிலூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடத்துடன் கூடிய கூடுதல் படுக்கைகள் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய கட்டடக் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா ஆய்வு செய்தாா். புதிய மருத்துவமனைக் கட்டடம் 6 தளங்களுடன் 300 படுக்கைவசதிகளுடன் 13346 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவைஅரங்கம், புறநோயாளிகள் பிரிவு, சிடி ஸ்கேன், நிா்வாகக் கட்டடம், மின்தூக்கி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், மருத்துவமனையில் நடைபெறும் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

ஆய்வின் போது பொதுப்பணித் துறைசெயற்பொறியாளா் மாலா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.