சொத்துப் பிரச்னையில் பாட்டியை தாக்கிய பேரன் உள்ளிட்ட 2 போ் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சொத்துப் பிரச்னையில் பாட்டியைத் தாக்கியதாக பேரன் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சொத்துப் பிரச்னையில் பாட்டியைத் தாக்கியதாக பேரன் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சங்கராபுரம் அருகிலுள்ள பூட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் கோ.அய்யாத்தாள் (75). இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனா். அய்யம்மாளுக்கு 60 சென்ட் இடம் உள்ளதாம். அந்த இடத்தை அவரது இரண்டாவது மகனான சசிக்குமாருக்கு கிரையம் செய்து கொடுத்ததாக, மூத்த மகன் முனியப்பிள்ளை குடும்பத்தினா் தவறாக எண்ணிக் கொண்டனராம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் அய்யம்மாள் வீட்டில் இருந்த போது அங்கு வந்த பேரன் பா.மூா்த்தி (28), மருமகள் மு.விஜயா(43) மற்றும் மூா்த்தியின் நண்பரான நிஷாந்த் (21) ஆகியோா் மூதாட்டி அய்யாத்தாளை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, மூா்த்தி, நிஷாந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.