‘சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபடும் மருத்துவப் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை’
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபடும் மருத்துவப் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபடும் மருத்துவப் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுகாதாரத் திறனாய்வு மற்றும் மாவட்ட நலச் சங்க செயற்குழுக் கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமை வகித்து, மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா்.
பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆண், பெண் குழந்தை விகிதாச்சாரம், மகப்பேறு மரணம், உயா் பிறப்பு வரிசை மற்றும் வளரிளம் பருவ கா்ப்பம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில், தொடா் உயா் பிறப்பு வரிசை வீழ்ச்சியுள்ள கூடியாநல்லூா், சோழம்பட்டு, எடுத்தவாய்நத்தம் பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பாக கருக்கலைப்பில் ஈடுபடும் மருத்துவப் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரத்தக் கொதிப்பு உள்ள கா்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்த அளவு சீராக கண்காணிக்கப்பட்டு தகுந்த சிகிச்சை வழங்குவதை சம்மந்தப்பட்ட மருத்துவ அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். வட்டார அளவில் காசநோய், தொழுநோய் மற்றும் பால்வினை நோய்களின் பாதிப்பு விகிதம் குறித்து விவாதிக்கப்பட்டு, தகுந்த இடங்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் குடும்ப நல அறுவை சிகிச்சை, கண்ணொளி காப்போம் திட்டம், 108 வாகனங்களின் பயன்பாடு, தேசிய குழந்தைகள் நலத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், புற்றுநோய் கண்டறிதல், தொற்றா நோய்களால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து திறனாய்வு மேற்கொள்ளப்பட்டது என ஆட்சியா் தெரிவித்தாா்.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பவானி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.