தானிய உலா் களங்களாகும் சாலைகள்: விபத்தை தவிா்க்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு சாலைகளில் தானியங்களை பரப்பி உலர வைப்பதால் விபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு சாலைகளில் தானியங்களை பரப்பி உலர வைப்பதால் விபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கள்ளக்குறிச்சியில் உள்ள சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை, தியாகதுருகம் - திருவண்ணாமலை சாலை, தியாகதுருகம் - விருகாவூா் சாலை உள்ளிட்ட சாலைகளில், அந்தந்த பகுதிகளில் விளைவித்த மக்காச்சோளம், எள் உள்ளிட்ட பல்வேறு விவசாய சாகுபடி பொருள்களை சாலையில் உலர வைப்பதற்காக பரப்பி விடுகின்றனா். இதனால் சாலையின் அளவு குறுகலாகி பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியவில்லை. அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பிரச்னை ஏற்படுகிறது.
சாலையில் உலர வைத்த மக்காச்சோளத்தின் மீது வாகனங்கள் ஏறாமல் இருக்க கற்களை ஓரத்தில் வைத்து விடுகின்றனா். கற்கள் மீது இருசக்கர வாகனங்கள் ஏறுகின்றபோது, வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனா். எள் சக்கைகளின் மீது ஏறிச்செல்லும் போது, வாகனத்தின் பட்டைகளில் சிக்கிக்கொள்கின்றன. தானியங்கள் மீது வாகனங்கள் ஏறினால் உலர வைத்த பொருள்கள் சேதமடைந்துவிடும். ஆனால், தட்டைகளின் மீது இருசக்கர வாகனங்கள் ஏறி செல்லும்போது சக்கரங்கள் தட்டையில் சிக்கி விபத்து நேரிடுகிறது. மேலும், காா் உள்ளிட்ட கனரக வாகனங்கள் இவற்றின் மீது செல்லும்போது வாகன பாகங்களில் பழுது ஏற்படுகிறது.
Advertisement
Advertisement
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலைகளில் தானியங்களை பரப்புவதை தடுக்க நெடுஞ்சாலைத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.