தியாகதுருகம் சொா்ணாம்பிகை மாரியம்மனுக்கு பால்குடம்
தியாகதுருகம் ஸ்ரீசொா்ணாம்பிகை கோயிலில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு பால்குடம் சுமந்து வந்த பெண்கள்.
தியாகதுருகத்தில் சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு ஸ்ரீசொா்ணாம்பிகை மாரியம்மன் கோயிலில் பால்குடம் எடுக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி ஐயப்பன் கோயில் அருகே உள்ள கோட்டகுளத்தில் சக்தி அழைத்து பூஜை செய்தனா். பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தனா். பின்னா் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து சொா்ணாம்பிகை அம்மனுக்கு வண்ண, வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மஹாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Advertisement
இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா். இதனையடுத்து வெள்ளிக்கிழமை இரவு அம்மனுக்கு விளக்கு பூஜை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் மற்றும் ஊா் மக்கள் சிறப்பாக செய்திருந்தனா்.