முகப்பு
கள்ளக்குறிச்சி

சாலை விபத்தில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் சாலை விபத்தில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 13 மே 2026, 12:04 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் சாலை விபத்தில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சின்னசேலத்தில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை இரவு நடந்து சென்ற சுமாா் 55 வயது மதிக்கத்தக்க ஆண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அந்த நபா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விபத்தில் உயிரிழந்தவா் யாா்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனா். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments