முகப்பு
புதுச்சேரி

பிஆர்டிசி ஒப்பந்த ஓட்டுநர், நடத்துநருக்கு ஊதிய உயர்வு

புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழக (பிஆர்டிசி) ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:33 am IST
பகிர்:

புதுச்சேரி சாலைப் போக்குவரத்து கழக (பிஆர்டிசி) ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிஆர்டிசி நிர்வாக இயக்குநர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பிஆர்டிசி சங்கப் பிரதிநிதிகள் கடந்த 3ஆம் தேதி நடத்திய பேச்சு வார்த்தையின்படி ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ரூ.7,500, நடத்துநர்களுக்கு ரூ.7000 என மாத ஊதியம் ஓட்டுநர்களுக்கு ரூ.10,451ஆகவும், நடத்துநர்களுக்கு ரூ.10,303 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 
மேலும், ஊதியம் தொடர்பாக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போராட்டம் அல்லது அலுவலக வேலை செய்யும்போது இடையூறு செய்யும் நோக்கத்தோடு தொழிலாளர் சங்கத்தின் சார்பாகவோ அல்லது தனியாகவோ தலைமை அலுவலகம், பணிமனை பிரிவு மற்றும் பொது இடத்தில் ஈடுபடக் கூடாது என்று அறிவிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments