மோடியின் ரிமோட் கன்ட்ரோலராக கிரண் பேடி செயல்படுகிறார்
பிரதமர் மோடியின் ரிமோட் கன்ட்ரோலராக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி செயல்பட்டு திட்டங்களை தடுக்கிறார் என்று புதுவை மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் குற்றஞ்சாட்டினார்.
பிரதமர் மோடியின் ரிமோட் கன்ட்ரோலராக புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி செயல்பட்டு திட்டங்களை தடுக்கிறார் என்று புதுவை மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நெல்லித்தோப்பு தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சஞ்சய் தத் பேசியதாவது:
பிரதமர் மோடியின் ரிமோட் கன்ட்ரோலராக புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி செயல்பட்டு, மாநில காங்கிரஸ் அரசின் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுத்து வருகிறார். எனவே, மாநில அந்தஸ்து கேட்டு முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவரும் இணைந்து அனைத்துக் கட்சியினருடன் தில்லியில் ஜன.4-இல் போராட்டம் நடத்தவுள்ளனர்.
புயல் நிவாரணம் கேட்டு, கோரிக்கை வைத்தும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவும் பிரதமர் மோடி வரவில்லை.
வருகிற மக்களவைத் தேர்தல் புதுவைக்கு மட்டுமல்ல இந்தியாவின் தலைவிதியை மாற்றி அமைக்கக் கூடிய தேர்தலாக உள்ளது. இதனை அனைவரும் புரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும் என்றார்.
புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் பேசுகையில், முதல்வர் பதவியேற்றபோது இலவச அரிசி, ஓய்வூதியம், சென்டாக் நிதி ஆகியவற்றை எந்த காலத்திலும் நிறுத்தக் கூடாது என சபதமேற்றார். அவைகளை நிறைவேற்ற பல தடைகள் உள்ளன. அதனால் இலவச அரிசி வழங்க முடியவில்லை என்றாலும் கூட, அதற்கான பணம் வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், பொதுமக்கள் இலவச அரிசி கேட்பதால் அதனை வழங்க முதல்வரும், அமைச்சரும் சீரிய முயற்சி எடுத்து வருகின்றனர். தடைகளை மீறி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றார்
நமச்சிவாயம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.