முகப்பு
புதுச்சேரி

அரசுப் பள்ளியில் சிறுவர் இலக்கிய சந்திப்பு

புதுச்சேரி அருகேயுள்ள ஏம்பலம் அரசு தொடக்கப் பள்ளியில் சிறுவர் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

Updated On : 23 ஜூலை 2018, 9:46 am IST
பகிர்:

புதுச்சேரி அருகேயுள்ள ஏம்பலம் அரசு தொடக்கப் பள்ளியில் சிறுவர் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
புதுச்சேரி மூலக்குளம் பாரீசு நகரில் செயல்படும் பாரதி பல்கலை பேரவை சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 
3 மாதங்களுக்கு ஒருமுறை இச்சந்திப்பு நிகழ்ச்சியை பேரவை நடத்தி வருகிறது. 
இந்நிலையில் ஏம்பலம் பள்ளியில் 
48-வது நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறுவர்களின் மேடை அச்சத்தை போக்குவது, அவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணர்வது பேரவையின் நோக்கம். 
நிகழ்ச்சிக்கு மனவளக் கலை பயிற்சி மைய நிர்வாகி பாலமுருகன் தலைமை வகித்தார். 
பேரவையின் இயக்குநர் பாரதிவாணர் சிவா நோக்கவுரை ஆற்றினார்.
பணி நிறைவுபெற்ற தலைமை ஆசிரியர் ந.ஆறுமுகம், சிறுகதை எழுத்தாளர் ராஜேஸ்வரி சிவா ஆகியோர் சிறுவர்களை நெறிப்படுத்தினர். 
திருக்குறள் ஒப்பித்தல், குழுப்பாடல், பாரதியார் ஆத்திச்சூடி, விரும்பிய தலைப்பில் பேசுதல், கதை கூறுதல், ஒளவை ஆத்திச்சூடி, வில்லுப்பாட்டு, பொன்மொழிகள் கூறுதல், நாடம் உள்ளிட்டவற்றில் 60 மாணவ, மாணவிகள் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர். இச்சந்திப்பில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கேடயம் வழங்கப்பட்டது. தமிழின் சிறப்பை வெளிப்படுத்திய வில்லுப்பாட்டு குழுவுக்கு குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா நினைவு சுழற்கேடயத்தை பள்ளித் தலைமை ஆசிரியர் வி.ரெங்கநாதன் வழங்கினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments