முகப்பு
புதுச்சேரி

நேரு இளையோர் மைய முப்பெரும் விழா

மத்திய அரசின் இளைஞர் நல மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் நேரு இளையோர் மையம், உருவையாறு காமராஜர் மக்கள் பணி இயக்கம் ஆகியவை சார்பில் சர்வதேச யோகா தினம், இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி, காமராஜர்

Updated On : 23 ஜூலை 2018, 9:47 am IST
பகிர்:

மத்திய அரசின் இளைஞர் நல மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் நேரு இளையோர் மையம், உருவையாறு காமராஜர் மக்கள் பணி இயக்கம் ஆகியவை சார்பில் சர்வதேச யோகா தினம், இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி, காமராஜர் பிறந்த நாள் விழா ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
உருவையாறு கலையரங்கத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு புதுச்சேரி மாவட்ட நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் ஹெலன் ராணி தலைமை வகித்தார். யோகா பேராசிரியர் திருநாவுக்கரசு, யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி எடுத்துரைத்தார். 
முன்னதாக அரசுப் பள்ளியில் வைத்து யோகா செய்வது பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் பங்கேற்று யோகாவில் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், காமராஜர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். 
மேலும், பெண்களுக்கான கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் அவர் பரிசு வழங்கினார். விழாவில் காமராஜர் நற்பணி மன்றத் தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments