பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாவேந்தர் பாரதிதாசனாரின் மகன் மன்னர் மன்னன். தமிழறிஞரான இவர் கலை, இலக்கியம், சமுதாயம் உள்ளிட்ட பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு 75 ஆண்டுகள் ஆகின்றன.
இதனைக் கொண்டாடும் வகையில், "75 ஆண்டுகள் மன்னர் மன்னன் பொதுவாழ்க்கைப் புகழ்விழா' புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் வரும் செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மன்னர் மன்னன் வாழ்வியல் வண்ணங்கள் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு மன்னர் மன்னனின் தோற்றம், பல்வேறு பணிகள் குறித்த 12 தலைப்புகள் கொடுக்கப்பட்டன.
இந்தத் தலைப்புகளில் புதுச்சேரி, காரைக்கால், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று ஓவியம் வரைந்தனர்.
பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவர் பாரதி விழாவுக்கு தலைமை வகித்து போட்டியை தொடக்கிவைத்தார். போட்டி தொடர்பாக அவர் கூறுகையில், "பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் வாழ்க்கையையும், அவர்களது படைப்புகளையும் நன்கறிந்து உலகுக்கு அளித்தவர் மன்னர் மன்னன். அவருடைய சிறப்புகளை மாணவர்கள் நன்கு அறிய, கலைத்துறை வாயிலான நிகழ்வுகளை பாரதிதாசன் அறக்கட்டளை நடத்தி வருகிறது என்றார்.
ஓவியப் போட்டியில் 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிறந்த 15 ஓவியங்களை வரைந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டன.
பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.