இலவசமாக மது கொடுக்க மறுத்த காசாளரை பீர் புட்டியால் குத்திய இளைஞர் கைது
இலவசமாக மது கொடுக்க மறுத்த மதுக் கடையின் காசாளரை பீர் புட்டியால் குத்திய இளைஞர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டா
இலவசமாக மது கொடுக்க மறுத்த மதுக் கடையின் காசாளரை பீர் புட்டியால் குத்திய இளைஞர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி கோட்டக்குப்பம் அருகே சின்ன முதலியார்சாவடி மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சரவணன் (39). இவர் பாகூர் அருகே சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மதுபானக் கடையில் காசாளராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், சனிக்கிழமை மதுக் கடையில் சரவணன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அந்த மதுக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்த நெல்லிக்குப்பம் அருகே வெள்ளப்பாக்கம் புதுக் காலனியைச் சேர்ந்த மணி (24), மது போதையில் சரவணனிடம் இலவசமாக மது கேட்டாராம். சரவணன் மது கொடுக்க மறுத்துவிட்டதால், மணி அங்கிருந்த காலி பீர் புட்டியை எடுத்து சரணவனை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சரவணன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், பாகூர் காவல் உதவி துணை ஆய்வாளர் திருமால் வழக்குப் பதிவு செய்து, மணியை கைது செய்து விசாரித்து வருகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.