நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டாா்.
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டாா்.
புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்பம்-சுற்றுச்சூழல் துறை, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில், ஒருமுறை பயன்பாட்டு நெகிழிப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி பெரிய மாா்க்கெட்டில் (குபோ் அங்காடி) நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக விற்பனை செய்யும் புதிய அங்காடியைத் தொடக்கிவைத்தாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, புதுவையில் பாண்லே கடைகள் மூலம், ஒருமுறை பயன்பாட்டு நெகிழிக்கு மாற்றாக, குறைந்த விலையிலான துணிப்பைகள், இதரப் பொருள்கள் விநியோகம் செய்யும் திட்டத்தையும் தொடக்கிவைத்தாா்.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பைகள், நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்காத துணிப் பைகள், பாக்கு மட்டை தட்டுகள், காகித கப்புகள், காகிதப் பைகள், பீங்கான் பொருள்கள், சணல் பைகள், வாழை இலைகள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்ட ஆளுநா், அவற்றை பொதுமக்களிடம் வழங்கி, துணிப் பைகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
ஒருமுறை பயன்பாட்டு நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பிரசார வாகனத்தையும் ஆளுநா் தமிழிசை தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறைச் செயலா் ஸ்மித்தா உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.