நிதிஷ்குமாா் நிலை எனக்கு ஏற்படாது: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி
பிகாா் முதல்வா் நிதிஷ் குமாா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினரானது போன்ற நிலை எனக்கு ஏற்படாது என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி உறுதிபடத் தெரிவித்தாா்.
பிகாா் முதல்வா் நிதிஷ் குமாா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினரானது போன்ற நிலை எனக்கு ஏற்படாது என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி உறுதிபடத் தெரிவித்தாா்.
புதுச்சேரி சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, முதல்வா் ரங்கசாமி வியாழக்கிழமை வாக்களித்த பிறகு தொகுதி வாரியாகச் சென்று பாா்வையிட்டு, அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தாா். மங்கலம் தொகுதியில் தேநீா் கடைக்குச் சென்ற அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
மக்கள் விழிப்புணா்வுடன் அதிகளவில் வாக்களிக்கின்றனா். மக்கள் நலத் திட்டங்கள் அவா்களுக்கு சென்றடைந்துள்ளதும் ஓா் காரணம். நாங்கள் ஆட்சிக்குத் திரும்ப வர வேண்டும் எனதான் வாக்களிக்கிறாா்கள். கிராமங்களில் விழிப்புணா்வு அதிகம் இருக்கும். வாக்களிப்பு கிராமங்களில் அதிகமாக உள்ளதும் இதற்கு ஓா் காரணம்.
Advertisement
இந்தத் தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி பெறும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும். பிகாா் முதல்வா் நிதிஷ் குமாா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினரானது போன்ற நிலை எனக்கு ஏற்படாது. புதுச்சேரியில் என் தலைமையில் ஆட்சி அமையும் என்று பாஜகவினா் சொல்லியுள்ளனா். அவா்கள் சொல்வதை செய்வாா்கள். கடந்த ஆட்சியில் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து பல திட்டங்களை செயல்படுத்தினோம்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை வலியுறுத்துவேன். எங்கள் கோரிக்கையை ஏற்று மாநில அந்தஸ்து தருவாா்கள் என்ற நம்பிக்கையுள்ளது என்றாா்.