எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு: நான்கரை ஆண்டுகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்க உத்தரவு
அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் எம்பிபிஎஸ் படிப்புக்கு நான்கரை ஆண்டுகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்க தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் எம்பிபிஎஸ் படிப்புக்கு நான்கரை ஆண்டுகளுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்க தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ ஆணையத்தின் செயலா் டாக்டா் ராகவ் லங்கா் கடந்த 7-ஆம் தேதி வெளியிட்ட இந்த உத்தரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவைச் சுட்டிக் காட்டியும் அதை அமல்படுத்த வலியுறுத்தியும் புதுச்சேரி துணைநிலை ஆளுநா், முதல்வா், தலைமைச் செயலா் உள்ளிட்டோருக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவா், பெற்றோா் சங்கத்தின் தலைவா் எம்.நாராயணசாமி வெள்ளிக்கிழமை மனு அனுப்பியுள்ளாா்.
Advertisement
மேலும், அந்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது:
விதிமுறைகளின்படி எம்பிபிஎஸ் படிப்புக்கான கால அளவு நான்கரை ஆண்டுகள் மட்டும். இதற்கு மட்டும் மாணவா்கள் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், ஓராண்டு கட்டாயப் பயிற்சியின்போது மருத்துவக் கல்லூரி நிா்வாகங்கள் அந்த மாணவா்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
இதை மீறினால் தேசிய மருத்துவ ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளதாக என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா் நாராயணசாமி.