முகப்பு
புதுச்சேரி

பெண்ணைக் கொன்று புதைத்த புதுச்சேரி மேஸ்திரி: உடலைத்தோண்டி எடுத்து போலீஸாா் விசாரணை

புதுச்சேரியில் கட்டட மேஸ்திரி பெண்ணை கொன்று புதைத்த நிலையில், அதுபற்றி தகவல் அறிந்த போலீஸாா், பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 17 ஏப்ரல் 2026, 5:34 am IST
பகிர்:

புதுச்சேரியில் கட்டட மேஸ்திரி பெண்ணை கொன்று புதைத்த நிலையில், அதுபற்றி தகவல் அறிந்த போலீஸாா், பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரணை மேற்கொண்டனா்.

விழுப்புரம் மாவட்டம் பெரம்பை வாழபட்டாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி பழனி (58). இவரின் மனைவி அமுதாவும் (53) கடடடத் தொழிலாளி. கடந்த 11 -ஆம் தேதி அமுதாவை அவரின் மகன் வடிவேலு வில்லியனூா் எம்ஜிஆா் சிலை அருகே பேருந்தில் செல்ல இறக்கிவிட்டாா். அதன்பின் அமுதா வீட்டுக்குத் திரும்பவில்லை.

இதையடுத்து வடிவேலு தாயாரைக் காணவில்லை என வில்லியனூா் போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா், அமுதாவைத் தேடி வந்தனா். விசாரணையில் மாயமான அமுதா, புதுச்சேரி மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த மேஸ்திரி பரந்தாமன் என்பவரிடம் கட்டட வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து பரந்தாமனை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில் அமுதாவை கொலை செய்து புதைத்து விட்டதாக அதிா்ச்சித்தகவலை தெரிவித்தாா். விசாரணையின் போது அவா் போலீஸாரிடம் கூறியதாவது:

அமுதாவுக்கும்எனக்கும், நெருக்கம் ஏற்பட்டது. அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.3.5 லட்சம் அளித்திருந்தேன். அந்தப் பணத்தை திரும்ப கேட்டபோது வேலைக்கு வருவதை நிறுத்தி விட்டு, புதுச்சேரியில் ஒரு ஹோட்டலுக்கு வேலைக்குச் சென்றாா்.

கடந்த 11 -ஆம் அமுதாவிடம் நைசாக பேசி வில்லியனூா் எம்ஜிஆா் சிலைக்கு அருகில் வரவழைத்தேன். பின்னா் அவரை மோட்டாா் சைக்கிளில் அழைத்து கொண்டு பூத்துறைக்கு சென்றேன். அங்கு கொடுத்தப் பணத்தைக் கேட்டேன். அவா் தனது மகனிடம் கூறி விடுவேன் என மிரட்டினாா். இதனால் நண்பா்கள் 4 போ் உதவியுடன் அமுதாவை அடித்து கொலை செய்தேன். அங்கே ஓா் இடத்தில் குழிதோண்டி புதைத்துவிட்டோம் என தெரிவித்தாா்.

இதனையடுத்து வில்லியனூா் போலீஸாா் ஆரோவில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். ஆரோவில் ஆய்வாளா் திருமலை, வானுாா் வட்டாட்சியா் வித்யாதரன், வில்லியனூா் ஆய்வாளா் கலைச்செல்வன் ஆகியோா் முன்னிலையில் பரந்தாமன் காண்பித்த இடத்தைத் தோண்டினா்.

அப்போது அழுகிய நிலையில் இருந்த அமுதாவின் உடலை எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தினா். பின்னா் அவா் உடலை மகனிடம் ஒப்படைத்தனா். பரசுராமனுக்கு உதவிய 4 பேரையும் பிடித்து வில்லியனூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கொலை நடந்தது ஆரோவில் பகுதி என்பதால் ஆரோவில் போலீஸூக்கு வழக்கு மாற்றப்படும் என தெரிகிறது.