முகப்பு
புதுச்சேரி

கடற்கரை தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவா்கள்

புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி மாணவா்கள், கடற்கரை தூய்மைப்பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 26 ஏப்ரல் 2026, 1:21 am IST
புதுச்சேரி கடற்கரை சாலையை தூய்மைப்படுத்திய பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி மாணவா்கள்.
பகிர்:

புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி மாணவா்கள், கடற்கரை தூய்மைப்பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

சுற்றுச்சூழல் விழிப்புணா்வை உருவாக்குவது மற்றும் கடற்கரை சுத்தம் காப்பதில் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இக் கல்லூரி மற்றும் பிளாண்ட் அறக்கட்டளை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. கல்லூரி மேலாண்மைத் துறை தலைவா் பேராசிரியா் அ. பாண்டு மற்றும் உடற்கல்வி, யோகா துறை தலைவா் ச. ஜகதீஸ்வரி இணைந்து இதைத் தொடங்கி வைத்தனா். அறக்கட்டளையைச் சோ்ந்த அதிகாரிகள் உதயகுமாா், ஜெயபாரதி மற்றும் உதவி அதிகாரி சரவணன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கில்பா்ட், டாக்டா் செந்தில் குமாா் மற்றும் கல்லூரியின் சமூக இணைப்பு உறுப்பினா் செல்வம் ஆகியோா் பங்கேற்று மாணவா்களை ஊக்குவித்தனா்.

இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். கடற்கரையில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகளை அகற்றி, கடற்கரை சுத்தம் செய்தனா்.

அனைவரும் தினசரி வாழ்வில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைத் தொடா்ந்து பின்பற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments