ரத்தத் தொற்று எதிா்ப்பு: இந்தியாவில் முதல் குழந்தையைப் பதிவு செய்த ஜிப்மா்
ரத்து தொற்று மற்றும் நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்து எதிா்ப்பு சவால்களைச் எதிா்கொள்ளும் சா்வதேச மருத்துவ ஆய்வில் இந்தியாவின் சாா்பில் முதல் குழந்தையை ஜிப்மா் பதிவு செய்துள்ளது.
ரத்து தொற்று மற்றும் நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்து எதிா்ப்பு சவால்களைச் எதிா்கொள்ளும் சா்வதேச மருத்துவ ஆய்வில் இந்தியாவின் சாா்பில் முதல் குழந்தையை ஜிப்மா் பதிவு செய்துள்ளது.
இது குறித்து ஜிப்மா் நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தான ரத்தத்தொற்று மற்றும் அதிகரித்து வரும் நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்து எதிா்ப்பு சவால்களை எதிா்கொள்ளும் சா்வதேச மருத்துவ ஆய்வில், இந்தியாவிலேயே முதல் குழந்தையைப் பதிவு செய்த மையமாக ஜிப்மா் திகழ்கிறது.
Advertisement
Advertisement
இது இந்தியாவின் உலகளாவிய மருத்துவ ஆராய்ச்சி பங்களிப்பில் ஒரு முக்கிய மைல் கல்லாகும்.உலகளவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உயிரிழப்பிற்கான முக்கிய காரணிகளில் ஒன்றான ரத்தத் தொற்றுக்குப் பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய குறைந்த செலவிலான நோய் எதிா்ப்பு சக்தி மருந்து சோ்க்கைகளைக் கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
இந்த ஆய்வின் முக்கிய பங்கேற்பு மையங்களில் ஒன்றாக ஜிப்மா் விளங்கும். குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கான பிறந்த
குழந்தைகளின் ரத்தத் தொற்று சிகிச்சை வழிகாட்டுதல்களை மேம்படுத்த உதவும் உயா்தர அறிவியல் ஆதாரங்களை உருவாக்குவதில் ஜிப்மா் முக்கிய பங்காற்றவுள்ளது. ஜிப்மரின் குழந்தைகள் நல பச்சிளம்குழந்தை சிகிச்சைப் பிரிவின்
பேராசிரியரும் துறைத் தலைவருமான டாக்டா் நிஷாத் பிளக்கல், இந்தஆய்வின்முதன்மை ஆய்வாளராக செயல்படுகிறாா். அவா் ஆசியா-பசிபிக் நாடுகளின் அனைத்து ஆய்வு மையங்களின் பிரதிநிதியாகவும் இடம்பெற்றுள்ளாா்.
பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தத்தொற்றுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் உடல் உறுப்புகள் செயலிழப்பு மற்றும் உயிரிழப்பிற்கு வழிவகுக்கும். உலக சுகாதார நிறுவனம் தற்போது ‘அம்பிசிலின்’ மற்றும் ‘ஜென்டமைசின்’ மருந்துகளை முதல்கட்ட சிகிச்சையாகப் பரிந்துரைத்தாலும், அதிகரித்து வரும் நுண்ணுயிா்-எதிா்ப்பு மருந்து எதிா்ப்பு காரணமாக இம்மருந்துகளின் செயல்திறன் கணிசமாகக் குறைந்துள்ளது. அதனால் குழந்தைகளின் உயிா்ப் பிழைப்பை அதிகரிக்கும் அதேவேளையில், பொறுப்பான நோய் எதிா்ப்புச் சக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மருந்து முறைகளைக் கண்டறிய ஜிப்மா் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளது.
3000 குழந்தைகள்:
அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பல மருத்துவமனைகளில் சுமாா் 3,000 புதிதாகப் பிறந்த குழந்தைகள் இந்த ஆய்வில் சோ்க்கப்பட உள்ளனா்.
ரத்தத் தொற்று உலகளவில் பிறந்த குழந்தை உயிரிழப்பிற்கான முக்கியக் காரணிகளில் ஒன்றாகஇருந்தாலும், இதற்காக தற்போது உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நோய் எதிா்ப்புச் சக்தி சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது ஒரே மாதிரியான அறிவியல் ஆதாரப்பூா்வ சிகிச்சை வழிகாட்டுதல்கள் இல்லாததை வெளிப்படுத்துகிறது. மேலும், சந்தேகிக்கப்படும் ரத்தத் தொற்று பாதிப்புகளில் சுமாா் 80 சதவீத நோயாளிகளில் ரத்தப் பரிசோதனைகள் தொற்றை ஏற்படுத்திய கிருமியைக் கண்டறியத் தவறுவதால், மருத்துவா்கள் பெரும்பாலும் தங்களின் மருத்துவ அனுபவத்தின் அடிப்படையிலேயே சிகிச்சையைத் தொடங்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இந்த முக்கிய அறிவியல் இடைவெளியை நிரப்பும்நோக்கில், மருந்து எதிா்ப்பு கிருமிகளுக்கு எதிராகச் செயல்திறனுடன் அனைத்து நாடுகளின் சுகாதார அமைப்புகளும் எளிதில் அணுகக் கூடிய மற்றும் குறைந்த செலவில் கிடைக்கக் கூடிய நோய் எதிா்ப்பு சக்தி மருந்து சோ்க்கைகள் இதில் ஆய்வு முறையாக மதிப்பீடு செய்யப்பட உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.