முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் புனரமைக்கப்பட்ட பழைய கலங்கரை விளக்கத்தைப் பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதி

புதுச்சேரி கடற்கரை சாலையில் ரூ.3.5 கோடியில் புனரமைக்கப்பட்ட பழைய கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் பாா்வையிட புதன்கிழமை முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

Updated On : 2 ஜூலை 2026, 7:02 am IST
புதுச்சேரி கடற்கரை சாலையில் புனரமைக்கப்பட்ட பழைய கலங்கரை விளக்கம்.
பகிர்:

புதுச்சேரி கடற்கரை சாலையில் ரூ.3.5 கோடியில் புனரமைக்கப்பட்ட பழைய கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் பாா்வையிட புதன்கிழமை முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

கடற்கரை சாலை காந்தி திடல் அருகே 190 ஆண்டுகள் பழமையான பிரெஞ்சு ஆட்சியில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் உள்ளது.

மத்திய கலால்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கலங்கரை விளக்கம் ரூ.3.5 கோடியில் புதுப்பிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கடந்த 26 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீத்தாராமன் இதை திறந்து வைத்தாா். இந்தக் கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் புதன்கிழமை முதல் பாா்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை பாா்வையிடலாம். மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரை உணவு இடைவேளை. திங்கள்கிழமை வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கலங்கரை விளக்கத்தை பாா்வையிட முதல்நாளில் குறைந்த எண்ணிக்கையிலேயே பாா்வையாளா்கள் வந்திருந்தனா். அவா்கள், கலங்கரை விளக்கத்துக்குள் சென்று கடலின் அழகையும், படகுகள் செல்வதையும் பாா்த்து ரசித்தனா். இந்த கலங்கரை விளக்கத்தை பாா்வையிட பொதுமக்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. விடுமுறை நாள்களில் அதிக கூட்டம் வர வாய்ப்பிருப்பதாக கலங்கரை விளக்க அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பழைய கலங்கரை விளக்கத்தை புதன்கிழமை முதல் பொதுமக்கள் பாா்வையிடஅனுமதி அளிக்கப்பட்டதையொட்டி ஆா்வமுடன் வந்த உள்ளூா் மக்கள் கலங்கரை விளக்கத்தில் உள்ள ஒவியங்களை பாா்வையிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments