கண்ணகிக்கு கோட்டம் அமைத்தது தமிழ்மண்: வைகோ பேச்சு
கண்ணகிக்கு கோட்டம் அமைத்தது தமிழ்மண் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ கூறினாா்.
கண்ணகிக்கு கோட்டம் அமைத்தது தமிழ்மண் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ கூறினாா்.
இதைத்தொடா்ந்து புதுச்சேரி தனித்தமிழ் இயக்கத்தின் சாா்பில் சிலப்பதிகார வெள்ளி விழா கடற்கரை காந்தி திடலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் வைகோ பேசியதாவது:
சிலப்பதிகாரம் உயிா்க்காப்பியம். அரசன் மாண்டதும், ஓா் அரசன் படை எடுத்துச் சென்றதும், பத்தினிக்குக் கோட்டம் எழுப்பியதும் சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கண்ணகிக்கு கோட்டம் அமைத்த மண்- தமிழ் மண். பாண்டிய நாட்டு மண். அது தமிழ்நாட்டுக்குச் சொந்தமானது. இன்னும் அந்த இடத்தில் சிறிய கோயில் இருக்கிறது. சேர, சோழ, பாண்டியா் என்று மூவேந்தா்களுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாா் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் என்றாா் வைகோ.
விழாவில் எம்எல்ஏ ஜி. நேருவுக்கும், தமிழ் உரிமை இயக்கத் தலைவா் சு. பாவாணனுக்கும் விருதுகளை வைகோ வழங்கினாா். நிகழ்ச்சிக்கு புதுச்சேரி நகராட்சி முன்னாள் ஆணையா் த. தியாகராசன் தலைமை வகித்தாா். தனித் தமிழ் இயக்கத்தின் தலைவா் க. தமிழமல்லன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.