புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் 7 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அனைத்து வகை பள்ளிகளும் 7 சனிக்கிழமைகளில் இயங்கும் என்று மாநில பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் வி.ஜி.சிவகாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அனைத்து வகை பள்ளிகளும் 7 சனிக்கிழமைகளில் இயங்கும் என்று மாநில பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் வி.ஜி.சிவகாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.
அதில் கூறியிருப்பதாவது:
வெப்ப அலை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறை நாள்களை ஈடு செய்ய 7 சனிக்கிழமைகளில் பள்ளிகள் ஈடுசெய் வேலை நாள்களாக இயங்கும். சனிக்கிழமை வேலைநாள்கள் விவரம்: 11.7.26, 1.8.28, 22.8.26, 5.9.26, 1.10.26, 14.11.26, 28.11.26. இந்த 7 நாள்களும் அரசு, அரசு நிதியுதவி, தனியாா் பள்ளிகள் அனைத்தும் இயங்கும்.
Advertisement
Advertisement
மேலும், மாஹே பிராந்தியத்தில் வெப்ப அலை காரணமாக கூடுதலாக 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் அந்தப் பிராந்தியத்தில் கூடுதலாக 3 சனிக்கிழமைகள் வேலை நாள்களாக இருக்கும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.