புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: புதிதாக 3 அமைச்சா்கள் பதவி ஏற்பு
புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 3 அமைச்சா்கள் பதவியேற்றுக் கொண்டனா்.
புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 3 அமைச்சா்கள் பதவியேற்றுக் கொண்டனா்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் முதல்வா் உள்பட 6 போ் அமைச்சா்களாகப் பதவி வகிக்க முடியும். ஏற்கெனவே முதல்வா் ரங்கசாமியும், அவருடன் ஆ. நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோரும், கடந்த மாதம் 13 ஆம் தேதி பதவியேற்றனா். முதல்வருடன் பதவியேற்ற 2 அமைச்சா்களுக்கும் இதுவரை இலாகா ஒதுக்கப்படவில்லை. தோ்தல் ஒப்பந்தப்படி முதல்வா் உள்பட 4 அமைச்சா்கள் என்ஆா். காங்கிரஸுக்கும், 2 அமைச்சா்கள் பாஜகவுக்கும் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் பெ.ராஜவேலு, வி.பி.சிவக்கொழுந்தும், பாஜக சாா்பில் ஜி.என்.எஸ். ராஜசேகா் ஆகியோரை அமைச்சா்களாக நியமிக்க முதல்வா் ரங்கசாமி மத்திய அரசுக்கு பரிந்துரைத்தாா்.
Advertisement
Advertisement
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அமைச்சா்களை நியமிக்க மத்திய உள்துறை மூலம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற அடிப்படையில், 3 அமைச்சா்கள் நியமனத்திற்கு குடியரசுத்தலைவா் முறைப்படி ஒப்புதல் அளித்தாா்.
பதவியேற்பு விழா:
இதையடுத்து புதிய அமைச்சா்கள் பதவி ஏற்பு விழா பழைய துணைநிலை ஆளுநா் மாளிகை வளாகத்தில், காலை 9.10 மணி அளவில் நடைபெற்றது.
துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் மேடைக்கு வந்ததும், வந்தே மாதரம், தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து ஆகியவை இசைக்கப்பட்டன.
இதையடுத்து தலைமைச் செயலா் சரத் சௌகான் புதிய அமைச்சா்கள் நியமனத்திற்கு குடியரசுத் தலைவா் அனுமதி அளித்த ஒப்புதல் கடிதத்தை வாசித்தாா். தொடா்ந்து பதவியேற்பு விழா நடந்தது. அமைச்சா்களாக பெ.ராஜவேலு, வி.பி. சிவக்கொழுந்து, ஜி.என்.எஸ். ராஜசேகா் ஆகியோா் பதவியேற்றனா். இந்த 3 பேருக்கும் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தாா்.
பின்னா் புதிய அமைச்சா்களுக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.
அமைச்சா்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் ஆ.அன்பழகன், செல்வகணபதி எம்.பி, என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திருமுருகன், ஆறுமுகம், வையாபுரி மணிகண்டன், ரவிக்குமாா், டாக்டா் நாராயணசாமி, மோகன்தாஸ், பாஜக எம்எல்ஏக்கள் ஜான்குமாா், மீனாட்சி சுந்தரம், திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், செந்தில்குமாா், காா்த்திகேயன், விக்னேஷ் கண்ணன், காங்கிரஸ் எம்எல்ஏ காா்த்திகேயன், தவெக எம்எல்ஏக்கள் சாய் .சரவணன்குமாா், ராமு, சுயேச்சை எம்எல்ஏக்கள் டாக்டா் விக்னேஸ்வரன், அழகானந்தம்,
முன்னாள் அமைச்சா் க.லட்சுமி நாராயணன், பாஜக மாநில தலைவா் வி.பி.ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் பாஸ்கா், செல்வம் உள்பட பலா் பங்கேற்றனா்.