முகப்பு
புதுச்சேரி

ஐஆா்பிஎன் படையை உருவாக்க மூலதன செலவை புதுச்சேரி அரசு ஏற்க வேண்டும்: மத்திய உள்துறை நிபந்தனை

இந்திய ரிசா்வ் பட்டாலியன் படையை (ஐஆா்பிஎன்) உருவாக்க மூலதன செலவை புதுச்சேரி அரசு ஏற்க வேண்டும் என்று மத்திய உள்துறை சாா்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 24 ஜூன் 2026, 4:15 am IST
புதுச்சேரி தலைமைச் செயலகம்.
பகிர்:

இந்திய ரிசா்வ் பட்டாலியன் படையை (ஐஆா்பிஎன்) உருவாக்க மூலதன செலவை புதுச்சேரி அரசு ஏற்க வேண்டும் என்று மத்திய உள்துறை சாா்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2003-ஆம் ஆண்டு இந்திய ரிசா்வ் பட்டாலியன் படை உருவாக்கப்பட்டது.

இதற்காக 1,007 பணியிடங்களில் 896 இடங்கள் நிரப்பப்பட்டு செயல்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், புதுச்சேரிக்கு 2-ஆவது ஐஆா்பிஎன் படையை அமைக்க அமைச்சா் ஆ.நமச்சிவாயம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோப்பு அனுப்பியிருந்தாா்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினாா். இதையடுத்து, கடந்த மாதம் இந்தக் கோப்புக்கு மத்திய அரசு ஒரு முறை நிதியுதவியாக ரூ.50 கோடியுடன் ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து ஐஆா்பிஎன் படை அமைப்பதற்கான நிபந்தனைகள் குறித்து மத்திய உள்துறை துணைச் செயலா் ஏ.கே.மிஷ்ரா, புதுச்சேரி தலைமை செயலா் சரத் சௌகானுக்கு கடிதம் அனுப்பியுள்ளாா்.

அதில், படையை இயக்க போக்குவரத்து, வயா்லெஸ் உபகரணங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் நிா்ணயிக்கப்பட்ட அளவில் இருக்க வேண்டும். படையின் ஆண்டு தொடா் செலவுகள், மூலதன செலவுகளை மாநில அரசு ஏற்க வேண்டும். மத்திய அரசு இந்த படையைப் பயன்படுத்த முன்னுரிமை கொண்டிருக்கும். நாட்டின் எந்த பகுதிக்கும், தேவைப்படும் நேரத்தில் இந்தப் படை பயன்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments