முகப்பு
விழுப்புரம்

கரும்புகள் சரிந்து விழுந்ததில் பெண் சாவு

செஞ்சியில் டிராக்டரில் இருந்து கரும்பு சரிந்து விழுந்ததில், மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் உயிரிழந்தார்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:30 am IST
பகிர்:

செஞ்சியில் டிராக்டரில் இருந்து கரும்பு சரிந்து விழுந்ததில், மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் உயிரிழந்தார்.
செஞ்சியில் அழகு நிலையம் நடத்தி வந்தவர் ரவி மனைவி ரம்யா(30). இவர், புதன்கிழமை கடைக்குச் சென்றுவிட்டு, மதிய உணவுக்காக திருவண்ணாமலை சாலை, முல்லை நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது, அவருக்குப் பின்னால் கரும்புகள் ஏற்றி வந்த டிராக்டர் ரம்யாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால், திடீரென டிராக்டர் ஓட்டுநர் வண்டியை நிறுத்திய போது, டிராக்டரில் இருந்த கரும்புகள் ரம்யாவின் மீது சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், செஞ்சி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments