முகப்பு
விழுப்புரம்

மகளிர் கல்லூரியில் கல்லூரி தின விழா

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் கல்லூரி தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:31 am IST
பகிர்:

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் கல்லூரி தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. 
கல்லூரி முதல்வர் ஏ.வி.அருணாகுமாரி வரவேற்றார். கல்விப் பிரிவு புலமுதன்மையர் ஸ்ரீதேவி கல்லூரி வளர்ச்சி அறிக்கை தாக்கல் செய்தார். ஆசிரியைகள் ஸ்ரீஜா, உத்திரா ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.
விழாவுக்கு கல்லூரித் தாளாளர் ஏ.சாமிக்கண்ணு தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.செந்தில்குமார், இ.எஸ்.கல்விக் குழும பதிவாளர் கஸ்தூரிபாய் தனசேகரன், துணைப் பதிவாளர் சௌந்திரராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் வி.பெருவழுதி, மாணவர்கள் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான நெறிமுறைகள், வேலைக்கான நேர்காணலை அணுகும் முறை, நூலகத்தின் பயன்பாடு, திறனாய்தலின் தேவை, கற்றலின் அவசியம், நற்சிந்தனைகள் போன்றவை குறித்து மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
நிகழாண்டில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவிகள் சந்தியா, தெய்வானை ஆகியோருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
சிறந்து விளங்கிய உயிர் வேதியியல் துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினர். விழாவில் பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments