மோட்டார் வாகனம் ஓட்டும் பெண்களுக்கு விழிப்புணர்வு
செஞ்சியில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி பெற்ற பெண்களுக்கு, கடைப்பிடிக்க வேண்டிய சாலை விதிகள் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
செஞ்சியில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பயிற்சி பெற்ற பெண்களுக்கு, கடைப்பிடிக்க வேண்டிய சாலை விதிகள் குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தமிழக அரசு சார்பில் ஏழை பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர மோட்டார் சைக்கிள் வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்த ஏராளமான பெண்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திலும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சான்றைப் பெற விண்ணப்பம் செய்திருந்தனர்.
திங்கள்கிழமை அலுவலகத்துக்கு வந்திருந்த பெண்களிடம் செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.