விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவை உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அமைக்காமல் அரசியல் ஆதாயத்துக்காக செயல்பட்டு வரும் மத்திய, கர்நாடக மாநில அரசுகளைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் தீர்மானங்களை நிறைவேற்றி, ஏப்.3 முதல் ஏப்.5 வரை விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கே.தமிழ்செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் ஏ.சங்கரன், பொருளாளர் ஏ.அன்பழகன், வழக்குரைஞர்கள் ராஜாராமன், லூசியா, முத்துக்குமார், மணிகண்டன், பவானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.