12/16: ஒரே குரூப்பில் 2 உள்பட 12 நாடுகள் உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றம்!
கால்பந்து உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறிய அணிகள் குறித்து...
கால்பந்து உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறாமல், இதுவரை காலை இந்திய நேரப்படி காலை 10.34 மணி வரைக்கும் 12 அணிகள் வெளியேறியுள்ளன.
மொத்தம் 48 அணிகள் பங்குபெறும் இந்த உலகக் கோப்பையில் 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகின்றன. இதில் 16 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறுகின்றன.
கடந்த ஜூன் 11ஆம் தேதி தொடங்கிய இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
குரூப் ஹெச்சில் உருகுவே, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் வெளியேறியுள்ளன. இந்த உலகக் கோப்பையில் முதல்முறையாக இரு அணிகள் ஒரே பிரிவில் இருந்து வெளியேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியம் அணியிடம் 1- 5 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற நியூசிலாந்து, உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது. இதுவரை வெளியேறியுள்ள 12 அணிகளின் விபரங்கள்:
குரூப் ஏ: செக் குடியரசு
குரூப் பி: கத்தார்
குரூப் சி: ஹைதி
குரூப் டி: துருக்கி
குரூப் இ: குராகோ
குரூப் எஃப்: துனிசியா
குரூப் ஜி: நியூசிலாந்து
குரூப் ஹெச்: உருகுவே, தென்னாப்பிரிக்கா
குரூப் ஐ: இராக்
குரூப் ஜே: ஜோர்டான்
குரூப் கே: இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
குரூப் எல்: பனாமா
12/16: 12 teams, including two from the same group, eliminated from the World Cup!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.