முகப்பு
செய்திகள்

32/32: உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 32 அணிகள்!

கால்பந்து உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 32 அணிகள் குறித்து...

Updated On : 28 ஜூன் 2026, 1:12 pm IST
ஆர்ஜென்டீனா - ஜோர்டான் ஆட்டத்தைக் கண்டு ரசித்த ஜோர்டன் கால்பந்து ரசிகர்கள். - படம்: ஏபி
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 32 அணிகள் இறுதிசெய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் கடந்த ஜூன் 11ஆம் தேதி தொடங்கிய போட்டியில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்றன.

லீக் சுற்றில் 48 அணிகளும் 12 குரூப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து 32 அணிகள் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆஃப் 32க்கு முன்னேறியுள்ளன.

ஒவ்வொரு அணியும் தலா 3 போட்டிகள் விளையாடின. மொத்தமாக லீக் சுற்றில் 72 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில், நாக் அவுட் சுற்றுக்கு முதல் அணியாக மெக்சிகோவும் கடைசி அணியாக அல்ஜீரியாவும் தேர்வாகின.

Advertisement

Advertisement

கடைசி நாளான இன்று குரேஷியா, காங்கோ, ஆஸ்திரியா, அல்ஜீரியா ஆகிய அணிகள் தேர்வாகின. மொத்தமாக 32 அணிகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

வரிசையாக தேர்வான 32 அணிகளின் விவரங்கள்: மெக்சிகோ, அமெரிக்கா, ஜெர்மனி, ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே, கொலம்பியா, ஸ்விட்சர்லாந்து, கனடா, பிரேசில், மொராக்கோ, போஸ்னியா, தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, ஈகுவாடர், நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், கேப் வெர்டே, பராகுவே, எகிப்து, போர்ச்சுகல், இங்கிலாந்து, கானா, பெல்ஜியம், செனகல், குரேஷியா, காங்கோ, ஆஸ்திரியா, அல்ஜீரியா ஆகிய அணிகள் தேர்வாகியுள்ளன.

குரூப் வாரியாக தேர்வான 32 அணிகளின் விவரங்கள்:

குரூப் ஏ: மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா.

குரூப் பி: ஸ்விட்சர்லாந்து, கனடா, போஸ்னியா.

குரூப் சி: பிரேசில், மொராக்கோ.

குரூப் டி: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பராகுவே.

குரூப் இ: ஜெர்மனி, ஐவரி கோஸ்ட், ஈகுவாடர்

குரூப் எஃப்: நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன்

குரூப் ஜி: பெல்ஜியம், எகிப்து.

குரூப் ஹெச்: ஸ்பெயின், கேப் வெர்டே.

குரூப் ஐ: பிரான்ஸ், நார்வே, செனகல்.

குரூப் ஜே: ஆர்ஜென்டீனா, ஆஸ்திரியா, அல்ஜீரியா

குரூப் கே: கொலம்பியா. போர்ச்சுகல், காங்கோ

குரூப் எல்: இங்கிலாந்து, குரேஷியா, கானா.

summary

FIFA World Cup from mexico to algeria Every team in the Round of 32!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments