முகப்பு
விழுப்புரம்

மாவட்ட யோகா போட்டி: 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான யோகா போட்டிகளில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Updated On : 23 ஜூலை 2018, 9:33 am IST
பகிர்:

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான யோகா போட்டிகளில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்ட யோகா சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் விழுப்புரத்தில் நடைபெற்றது. யோகாசன சங்கத் தலைவர் வெங்கடேசன் போட்டிகளைத் தொடக்கிவைத்தார். பதஞ்சலி யோகா சமிதி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரபிரசாத் உடனிருந்தார்.
8 முதல் 10 வயது வரை, 11 முதல் 13 வரை உள்ள குழந்தைகளுக்கு 2 பிரிவுகளாகவும், 14 முதல் 16 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 17 முதல் 20 வயது வரை, 21 முதல் 24 வயது வரை, 25 முதல் 34 வயது வரை உள்ள பெரியவர்களுக்கு 3 பிரிவுகளாகவும், 35 வயதுக்கு மேல் ஒரு பிரிவாகும் என மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. 
இதில், சாதாரண யோகாசன முறைகள், இசையுடன் யோகா, நடனத்துடன் யோகா என்று 3 விதமாக போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்து காட்டினர். இதில், ஒவ்வொரு பிரிவுகளின் கீழ் வெற்றி பெற்ற முதல் 3 பேருக்கு தாலுகா காவல் ஆய்வாளர் ராஜன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். 
இந்தப் போட்டியில் தேர்வு பெற்றவர்கள், வரும் ஆகஸ்ட் மாதம் மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments