முகப்பு
விழுப்புரம்

திருக்கோவலூர் தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழா

திருக்கோவலூர் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு அனைத்து நிலை ஆசிரியர் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 5 நவம்பர் 2018, 9:21 am IST
பகிர்:

திருக்கோவலூர் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு அனைத்து நிலை ஆசிரியர் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.
 கபிலர் தொடர் ஆய்வரங்கம், உலக அஞ்சல் தினம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசர் கண்ணதாசன் ஆகியோர் நினைவு தினம், இளைஞர் எழுச்சி தினம், நூல் வெளியீடு ஆகியவை ஐம்பெரும் விழாவாக நடத்தப்பட்டன.
 கர்நாடக மாநில தமிழ்ச் சங்கத் தலைவர் கு.புகழேந்தி தலைமை வகித்தார். சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் அரங்க செம்பியன், மணலூர்பேட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் தா.சம்பத், வேட்டவலம் தமிழ்ச் சங்கத் தலைவர் தங்க.விசுவநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
 தமிழ்ச் சங்கச் செயலர் பாரதிமணாளன் வரவேற்றார்.
 தமிழ்ச் சங்கத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தொடக்கவுரை ஆற்றினார். கல்லைத் தமிழ்ச் சங்கச் செயலர் செ.வ.மதிவாணன், விருகாவூர் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகம், நட்சத்திர நன்னெறி மன்ற வட்டாரத் தலைவர் அ.முகமத்ரபி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
 மணலூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் அரங்க.குணசேகரன் எழுதிய அண்ணல் காந்தி காவியம் என்ற நூலை, திருக்கோவிலூர் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பா.திருஞானசம்பந்தம் வெளியிட்டார்.
 மாணவர்களுக்கான இலக்கியப் பயிற்சி அளித்த பேராசிரியர் அ.சிதம்பரநாதன், ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், சே.சதீஷ்குமார் ஆகியோரைப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. வானவில் கல்வி அறக்கட்டளைத் தலைவர் வே.ஜெயகுமார் நன்றி கூறினார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments