முகப்பு
விழுப்புரம்

இலக்கியச் சொற்பொழிவு

சங்கராபுரத்தில் சங்கைத் தமிழ்ச் சங்கம், தமிழ்வழிக் கல்வி இயக்கம் ஆகியவை சார்பில், இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 மே 2019, 5:33 am IST
பகிர்:


சங்கராபுரத்தில் சங்கைத் தமிழ்ச் சங்கம், தமிழ்வழிக் கல்வி இயக்கம் ஆகியவை சார்பில், இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் ம.சுப்பராயன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் மு.கலைச்செழியன், ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் பெ.சயராமன், ஓய்வு பெற்ற நில அளவையர் நா.சின்னசாமி, ஆசிரியை இரா.சவரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ச் சங்கச் செயலர் ச.சாதிக்பாட்ஷா 
வரவேற்றார்.
ஆசிரியை பெ.கலைச்செல்வி குறள் விளக்கம் அளித்தார். தமிழ்ச் சங்கக் காப்பாளர் ஆ.இலட்சுமிபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பாவேந்தரும் - தமிழும் என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி தமிழ்வேந்தன் எழில், நாகசாமியும் - திருக்குறளும் என்ற தலைப்பில் தமிழ்வழிக் கல்வி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் அ.சி.சின்னப்பதமிழர், பாவேந்தரும் - பெரியாரும் என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பொன்.அறிவழகன் ஆகியோர் பேசினர்.
தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் குறிஞ்சி அரங்க.செம்பியன், கல்லைத் தமிழ்ச் சங்கச் செயலர் செ.வ.மதிவாணன்,  தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன், மருத்துவர் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்ச் சங்கப் பொருளாளர் தி.கோ.நரசிம்மன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments