முகப்பு
விழுப்புரம்

தில்லியில் தவிக்கவிட்டு தலைமறைவான கணவர்: பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார்

புதுதில்லியில் காதல் திருமணம் செய்து தவிக்கவிட்டு, தலைமறைவான திருக்கோவிலூரைச் சேர்ந்த கணவரை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று  பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

Updated On : 26 மே 2019, 5:35 am IST
பகிர்:


புதுதில்லியில் காதல் திருமணம் செய்து தவிக்கவிட்டு, தலைமறைவான திருக்கோவிலூரைச் சேர்ந்த கணவரை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று  பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சாரதா (26)  என்பவர் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை புகார் மனு அளித்த பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 நான் விருதுநகர் மாவட்டம் குளிர்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவள். புதுதில்லியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன்.
என்னுடன் வேலை பார்த்து வந்த விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள வடியாங்குப்பத்தைச் சேர்ந்த பச்சையப்பனுக்கும் (24), எனக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தோம். 
இதையடுத்து, கடந்த 15.9.2017-இல் நண்பர்கள் முன்னிலையில், கோயிலில் திருமணம் செய்துகொண்டு, புதுதில்லியிலேயே வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தோம். தற்போது நான் 3 மாத கர்ப்பிணியாக உள்ளேன்.
இந்த நிலையில், கடந்த 13.3.2019 அன்று தனது சொந்த ஊரில் உறவினரின் சுப நிகழ்ச்சி இருப்பதால், அதற்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு, புதுதில்லியிலிருந்து திருக்கோவிலூருக்குச் சென்ற பச்சையப்பன், மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. நீண்ட நாள்களாக வராததால், அச்சத்தில் நான் ஊருக்குப் புறப்பட்டு வந்து, திருக்கோவிலூர் வடியாங்குப்பத்தில் உள்ள எனது கணவர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவரது வீடு பூட்டிக்கிடந்தது. அங்குள்ளவர்களிடம் கேட்டபோது, அவர்கள் சரியான பதில் கூறவில்லை. இதுகுறித்து  திருக்கோவிலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, என்னை திருமணம் செய்துகொண்டு, வெளி மாநிலத்தில் தவிக்கவிட்டு தலைமறைவான எனது கணவர் பச்சையப்பனை தேடி கண்டுபிடித்து தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments