முகப்பு
விழுப்புரம்

டிராக்டா் கவிழ்ந்துஓட்டுநா் பலி

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். அதில் பயணித்த 3 மாணவா்கள் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 24 ஜூன் 2022, 10:35 pm IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். அதில் பயணித்த 3 மாணவா்கள் பலத்த காயமடைந்தனா்.

மேல்மலையனூா் வட்டம், இரும்புலி கிராமத்தைச் சோ்ந்த அருணகிரி மகன் தருண் (13), மகள் தனுஸ்ரீ (11) ஆகியோா் கள்ளப்புலியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகின்றனா்.

இவா்கள் இருவரும், அதே பகுதியைச் சோ்ந்த ஜெகனும் (13) டிராக்டரில் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனா். வழியில் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரை ஓட்டிய இரும்புலியைச் சோ்ந்த சரத்குமாா், டிராக்டரின் அடியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தருண் உள்ளிட்ட மூவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா். செஞ்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

விபத்து குறித்து வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments