கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்! திருச்சியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து திருச்சியில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து திருச்சியில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திருச்சி எடமலைப்பட்டி புத்தூர் பகுதியில் திருச்சி மாவட்ட திமுக துணைச் செயலாளர் முத்து செல்வம் தலைமையில் ஏராளமான திமுகவினர் திரண்டு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
Advertisement
Advertisement
மேலும், அங்கிருந்த பொதுமக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுடனர்.
அப்போது, வைகோ, மற்றும் துரை வைகோ-க்கு எதிராக கண்டன முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.
சென்னை அண்ணா நகரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக மதிமுக முடிவெடுத்தது. இதற்கான தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Following the exit of MDMK from the DMK alliance, DMK cadres enthusiastically celebrated by bursting firecrackers and distributing sweets in Trichy.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.