திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகுவது குறித்து...
திமுக கூட்டணியிலிருந்து விலகியதாக மதிமுக அறிவித்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகுவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை அண்ணா நகரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்தக் கூட்டத்தில், திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக மதிமுக முடிவெடுத்தது. இதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவரும் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், தவெகவுடன் மதிமுக இணைவது குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக 4 இடங்களில் போட்டியிட்டு, 2 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலில் தேமுதிகவுக்கு திமுக அதிக இடங்கள் கொடுத்ததாக மதிமுக தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், கூட்டணியிலிருந்து இன்று வெளியேறியது.
ஏற்கெனவே திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயுஎம்எல் கட்சிகள் வெளியேறிய நிலையில், மதிமுகவும் வெளியேறியது.
MDMK passes resolution to withdraw from the DMK alliance
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.