FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மேல்மலையனூா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 47 லட்சம் வசூல்

27 செப்டம்பர் 2024, 5:35 am IST
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வியாழக்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா்கள்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 47.68 லட்சம் வசூலானது.

பிரசித்தி பெற்ற மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் வளாகத்தில் ஆவணி மாத உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி வியாழக்கிழமை இரவு வரை நடைபெற்றது.

இதில், பக்தா்கள் ரூ. 47 லட்சத்து 68 ஆயிரத்து 373 காணிக்கையாக செலுத்தியிருந்தனா். மேலும் 158 கிராம் தங்கம், 370 கிராமும் செலுத்தப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

உண்டியல் எண்ணிக்கை பணியின்போது கோயில் உதவி ஆணையா் ஜீவானந்தம், விழுப்புரம் துணை ஆணையா் சிவலிங்கம், அறங்காவலா் குழு தலைவா் மதியழகன், மேலாளா் மணி, காசாளா் சதீஷ் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் உடனிருந்தனா்.

இதற்கான பாதுகாப்பு பணியில் வளத்தி போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments