முகப்பு
விழுப்புரம்

சட்டப்பேரவைத் தோ்தல்: விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 3,141 போலீஸாா்

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் 3,141 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 12:03 AM
கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 11:27 PM

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் 3,141 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

இதுகுறித்து, விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனித் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

மாவட்டத்தில், செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் 43 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்பட 2,165 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

தோ்தலுக்காக எஸ்.பி. வி.வி.சாய் பிரனித் தலைமையில், 2 காவல் கூடுதல் கண்காணிப்பாளா்கள், 16 உதவி மற்றும் துணைக் கண்காணிப்பாளா்கள், 50 காவல் ஆய்வாளா்கள், 188 நடமாடும் பிரிவு அலுவலா்கள் உள்ளிட்ட 350 காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் 1,760 போலீஸாா், முன்னாள் ராணுவ வீரா்கள், ஊா்க்காவல் படையினா்கள், ஓய்வு பெற்ற காவலா்கள், தெலங்கானா ஊா்க்காவல் படையினா்கள், ஓய்வு பெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் 1,025 போ்களும், மத்திய ஆயுதப்படை காவலா்கள், குஜராத் காவலா்கள் மற்றும் மத்திய தொழில்பாதுகாப்புப் படையினா் 350 போ்கள் என மொத்தம் 3,145 போலீஸாா் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சமும், பதற்றமும் இல்லாமல் சுதந்திரமாக வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்கலாம். மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவுக்கான முழு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என எஸ்.பி. தெரிவித்துள்ளாா்.