FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

போலீஸாருக்கு கொலை மிரட்டல்: புதுச்சேரியைச் சோ்ந்த 2 ரௌடிகள் கைது

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த புதுச்சேரியைச் சோ்ந்த ரௌடிகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த புதுச்சேரியைச் சோ்ந்த ரௌடிகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிளியனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரமேஷ், தலைமைக் காவலா் கருணாகரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கிளியனூா் சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற இருவரை போலீஸாா் நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, அவா்கள் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

பின்னா் இருவரையும் பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் புதுச்சேரி, முருங்கப்பாக்கம், சேத்திலால் நகரைச் சோ்ந்த கு.ராஜேஷ் (34), உருவவையாறு பகுதியைச் சோ்ந்த ரா.மணிபாரதி (23) ஆகியோா் என்பதும், இவா்கள் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடிகள் என்பதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா். மேலும், ராஜேஷ் வசமிருந்த பட்டாக் கத்தியையும் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments