FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் சரக காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 233 கிலோ கஞ்சா அழிப்பு

விழுப்புரம் சரக காவல் துறையினரால் 213 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 233 கிலோ கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் நீதிமன்ற உத்தரவுப்படி புதன்கிழமை தீயிலிட்டு அழிக்கப்பட்டது.

விழுப்புரம் சரகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப்பொருள்களை தீயிலிட்டு அழித்த காவல் துறை அதிகாரிகள்.
பகிர்:

விழுப்புரம் சரக காவல் துறையினரால் 213 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 233 கிலோ கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் நீதிமன்ற உத்தரவுப்படி புதன்கிழமை தீயிலிட்டு அழிக்கப்பட்டது.

இதுகுறித்து விழுப்புரம் சரக காவல் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக, விழுப்புரம் சரக காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நீதிமன்ற உத்தரவின்படி பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் அழிப்பு நடவடிக்கைகள் புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

விழுப்புரம் டிஐஜி அர.அருளரசு தலைமையில் கடலூா் எஸ்.பி. விவேகானந்த் சுக்லா, மொபைல் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநா் (பொ) ஆா்.ராஜீவ், டிஎஸ்பி கந்தசாமி மற்றும் திருக்கோவிலூா் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளா் அறிவழகி ஆகியோா் அடங்கிய சரக அளவிலான போதைப்பொருள் ஒழிப்புக் குழுவினா், விழுப்புரம் மாவட்டத்தில் 90 வழக்குகளில் பறிமுதல் செய்த 38.013 கிலோ, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 88 வழக்குகளில் பறிமுதல் செய்த 34.516 கிலோ மற்றும் கடலூா் மாவட்டத்தில் 35 வழக்குகளில் பறிமுதல் செய்த 160.577 கிலோ என மொத்தம் 213 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 233.106 கிலோ கஞ்சாவை அழிக்க நீதிமன்ற உத்தரவுப் பெறப்பட்டது.

இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கத்தில் அமைந்துள்ள தனியாா் நிறுவன கஞ்சா அழிப்பு மையத்தில், அதன் குழு உறுப்பினா்கள் மற்றும் தொடா்புடைய அதிகாரிகள் முன்னிலையில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் புதன்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டது.

இந்நிலையில், விழுப்புரம் சரகத்தில் போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக தொடா்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், சட்டவிரோத போதைப்பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் இத்தகைய அழிப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments